Tuesday 19 September 2017

வரலாற்றில் இன்று 20.09.2017

செப்டம்பர் 20 (September 20) கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 264 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1187 – சலாதின் ஜெருசலேம் மீதான தாக்குதலை ஆரம்பித்தான்.
1519 – பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
1633 – சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார்.
1697 – ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், புனித ரோமப் பேரரசு டச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1847 – நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.
1854 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படையினர் கிறிமியாவில் இடம்பெற்ற போரில் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர்.
1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு வந்தது.
1878 – த ஹிண்டு இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
1945 – மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
1976 – துருக்கியில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 155 பேரும் கொல்லப்பட்டனர்.
1977 – வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது.
1979 – மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பேரரசன் முதலாம் பொக்காசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1984 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
1993 – துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

பிறப்புக்கள்

1924 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2014)
1940 – டாரோ ஆசோ, சப்பானிய அரசியல்வாதி
1946 – மார்க்கண்டேய கட்சு, இந்திய நீதிபதி
1948 – ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர்

இறப்புகள்

1933 – அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847)
1996 – பால் ஏர்டோசு, அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர் (பி. 1913)
2011 – புர்ஹானுத்தீன் ரப்பானி, ஆப்கானித்தானின் 10வது அரசுத்தலைவர் (பி. 1940)

Monday 18 September 2017

இன்றைய கரன்சி நிலவரம்.19.09.2017

                 கரன்சி நிலவரம்:

அமெரிக்கா(டாலர்) 64.188

ஐரோப்பா(யூரோ) 76.923

பிரிட்டன்(பவுண்டு) 86.94

ஆஸ்திரேலியா(டாலர்) 51.202

சிங்கப்பூர்(டாலர்) 47.648

ஹாங்காங்(டாலர்) 8.229

ஜப்பான்(யென்) 0.574

மலேசியா(ரிங்கட்) 15.309

பக்ரைன்(தினார்) 170.304

ஜோர்டான்(தினார்) 90.917

குவைத்(தினார்) 213.248

ஓமன்(ரியால்) 166.33

கத்தார்(ரியால்) 17.633

சவுதி(ரியால்) 17.118

தாய்லாந்து(பாத்) 1.941

ஐக்கிய அரபு எமிரேடு(திர்காம்) 17.419

இன்றைய தங்கம்,வெள்ளி,பிளாட்டிணம், நிலவரம்.19.09.2017

                     தங்கம்:

Pure Gold (24 k)      Standard Gold (22 K)
1 grm.       8 grms.     1 grm.          8 grms.
2969.00  23752.00    2827.00  22616.00

                      வெள்ளி:

         Silver 1 Grm.         Silver (1 Kg)
                  42.40               42400.00

                      பிளாட்டிணம்:

            1 gram (Rs)             8 grams (Rs)
              2636.00                    21088.00

தமிழகமே களேபரமா கிடக்கு… இவர ஆள காணுமே..! இன்னைக்காவது வருவாரா? ஆளுநரை எதிர்நோக்கும் தமிழகம்..!

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் இத்தகைய அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருவதாகக் கூறப்படுகிறது.

பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏக்கள்  தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துவரும் நிலையில், பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்தால் போதும் என்ற நிலையில் பழனிச்சாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதற்கடுத்து ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார்? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றம் கூட்டப்படுமா? என்றைக்கு கூட்டப்படும்? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ள நிலையில் ஆளுநர் இன்று தமிழகம் வருகிறார்.

நேற்றே ஆளுநர் தமிழகம் வருவதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் திடீரென மும்பையிலிருந்து கிளம்பி டெல்லி சென்றுவிட்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதித்துவிட்டு பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அவரிடமும் ஆலோசித்தார்.

இந்நிலையில், இன்று தமிழகம் வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நாளை வரை பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சட்டமன்றம் என்றைக்கு கூட்டப்படும் என்பதை ஆளுநர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் தங்களது தகுதிநீக்கத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் பழனிச்சாமிக்கு நெருக்கடி உருவாகும்.

ஆளுநர் என்ன செய்யப்போகிறார்? பார்ப்போம்….

வரலாற்றில் இன்று 19.09.2017

செப்டம்பர் 19 (September 19) கிரிகோரியன் ஆண்டின் 262 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 263 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 103 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1356 – இங்கிலாந்து “போல்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்றது.
1658 – யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.
1870 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28 இல் புருசியாவிடம் வீழ்ந்தது.
1881 – ஜூலை 2இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
   1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1893 – நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது.
1942 – மேற்கு உக்ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்டத்தட்ட 2,500 யூதர்கள் நாசி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
1944 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
1952 – ஐக்கிய அமெரிக்கா சார்லி சப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது.
1957 – ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
1976 – தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
1983 – சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1985 – மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – நைஜர் நாட்டில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததனால் 171 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
2006 – தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

பிறப்புக்கள்

1911 – வில்லியம் கோல்டிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் (இ. 1993)
1965 – சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை

இறப்புகள்

1881 – ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)
1980 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)
2014 – உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)

சிறப்பு நாள்

சிலி – இராணுவத்தினர் நாள்
சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் – விடுதலை நாள் (1983)

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது.



சென்னை சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மாலை நிலவரப்படி, 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,691க்கும், சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.21,528க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ரூ.28,780க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.1.40 காசுகள் உயர்ந்து ரூ.45.20க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,250 உயர்ந்து ரூ.42,220க்கும் விற்பனையாகிறது.

Sunday 17 September 2017

வரலாற்றில் இன்று 18.09.2017

செப்டம்பர் 18 (September 18) கிரிகோரியன் ஆண்டின் 261 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 262 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 104 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

96 – டொமிஷியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து நேர்வா ரோமப் பேரரசன் ஆனான்.
1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.
1635 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பேர்டினண்ட் பிரான்ஸ் மீது போர் தொடுத்தான்.
1739 – பெல்கிரேட் நகரம் ஒட்டோமான் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
1759 – கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1809 – லண்டனில் ரோயல் ஒப்பரா மாளிகை திறக்கப்பட்டது.
1810 – சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.
1812 – மொஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெட்ரொவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.
1851 – நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது புகழ்பெற்ற ‘அட்லாண்டா மத்தியஸ்தம்’ என்ர சொற்பொழிவை ஆற்றினார்.
1906 – ஹொங்கொங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1911 – ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார்.
1914 – முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படைகள் ஜெர்மனியின் தென் மேற்கு ஆபிரிக்காவில் தரையிறங்கினர்.
1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1922 – உலக நாடுகள் அணியில் ஹங்கேரி இணைந்தது.
1924 – மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
1932 – நடிகை பெக் எண்ட்விசில் ஹாலிவுட் சின்னத்தின் “H” எழுத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
1934 – சோவியத் ஒன்றியம் உலக நாடுகள் அணியில் இணைந்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: இக்னேசி மொஸ்கிக்கி தலைமையிலான போலந்து அரசினர் ருமேனியாவுக்கு தப்பினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சொபொபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் டச்சு, ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க்கைதிகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
1959 – வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
1960 – பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
1962 – ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.
1964 – வியட்நாம் மக்கள் இராணுவம் தென் வியட்நாமினுள் நுழைந்தது.
1968 – இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
1972 – இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
1974 – சூறாவளி ஹொண்டூராசைத் தாக்கியதில் 5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.
1976 – பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1977 – வொயேஜர் 1 பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
1980 – சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.
1982 – லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
1988 – பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.
1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.
1997 – 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2006 – கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2007 – மியான்மாரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

பிறப்புக்கள்

1709 – சாமுவேல் ஜோன்சன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1784)
1819 – லியோன் ஃபோக்கோ, பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1868)
1905 – கிரெட்டா கார்போ, சுவீடிய நடிகை (இ. 1990)
1979 – வினய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1180 – ஏழாம் லூயி, பிரான்சின் மன்னன் (பி. 1120)
1783 – லியோனார்டு ஆய்லர், சுவிற்சர்லாந்து கணிதவியல் அறிஞர் (பி. 1707)
1945 – இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
1961 – டாக் ஹமாஷெல்ட், சுவீடனைச் சேர்ந்த ஐநா பொதுச் செயலர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
1966 – வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
1967 – ஜோன் கொக்ரொஃப்ட், பிரித்தானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
1978 – ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், (பி. 1898)
2011 – டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)

சிறப்பு நாள்

சிலி – விடுதலை நாள் (1810)

Saturday 16 September 2017

ரஜினியின் விருப்பத்தைப் பொறுத்து அவருடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார்:கமல் அறிவிப்பு!

தமிழக மக்கள் விரும்பினால், அரசியலுக்கு வர தயார் என்றும், ரஜினியின் விருப்பத்தைப் பொறுத்து அவருடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளா

நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசியலையும், அரசியல் தலைவர்களையும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார். தனது அதிரடி டுவீட்டர் அறிவிப்புகளால் ஓட்டுமொத்த தமிழக அரசியலையும் தன்வசம் இழுத்து வரும் நடிகர் கமல்ஹாசன், தமிழக மக்கள் விரும்பும் பட்சத்தில் அரசியலுக்கு வரத் தயார் என்று மற்றுமொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கமல் கூறியதாவது,
நடிகர் ரஜினிகாந்திற்கும், தமக்கும் தொழில் ரீதியிலான போட்டிகள் இருந்தாலும், முக்கியமான பிரச்சினைகளில் இருவரும், ஒருவரையொருவர் சந்தித்து ஆலோசிப்பது வழக்கம் என்றும், அரசியல் களத்தில் நுழைந்த பிறகு, ரஜினியின் விருப்பத்தைப் பொறுத்து அவருடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய அரசியல் குறித்த தனது கருத்துகளை கூறும் போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஏன் பேசவில்லை என்பது போன்ற கேள்விகள் தன்முன் வைக்கப்படுவதாக கூறிய கமல், அப்போது, ஊரே பேசமால் அமைதியாக இருந்ததால், ஊரோடு கூடி வாழ்ந்த தாமும் பேசவில்லை என்று கூறினார்.

இனிமேலும் அரசியல் குறித்து பேசாமல் இருப்பது நல்லது இல்லை என்ற அடிப்படியிலேயே, தனது கருத்துகளை தெரிவித்து வருவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இன்றைய தங்கம்,வெள்ளி,பிளாட்டிணம். விலை நிலவரம்.17.09.2017

சென்னை நிலவரம்:-

    தங்கம்;24 கேரட்          22 கேரட்
      1 கிராம்3,071.          2,869
       8 கிராம்24568.        22952

வெள்ளி:விலை
      1 கிராம்44
1 கிலோ44,200

பிளாட்டிணம் விலை:
1 கிராம்  2724.00
8 கிராம் 21792.00

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு!!

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தின் ரிலிஸில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகவுள்ளார்.

இந்நிலையில் விஜய் நடிப்பு தாண்டி அரசியல் களத்திற்கும் வருவார் என கிசுகிசுக்கப்படுகின்றது, அதற்கு ஏற்றால் போல் தான் அவரின் நடவடிக்கைகளும் உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, மதுரையில் விஜய்யை அடுத்த எம்.ஜி.ஆர் என்றும், அவரின் இடத்தை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.